• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மீண்டுமொரு தேத்தண்ணி வித் நிதா

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: Hi ka unga stories la niraya cute dialogues or scenes varudhey?? Example ah thethanni with sendhooran…. Kadhal kaayakaran
?
?
… kousi plsss
?
?
…. Bomma
?
…. And Mohanan solra dialogue enna thandi poi paruda Endu savaal vidringa(apo radha ku mohanana pidikadha time)… inum niraya…. Ellu vaya pookalaye
?
?
Engarundhu pudikiringa indha dialogues ellam
ஹாஹா உண்மையாவே எனக்குத் தெரியாது. அது தானா வருது என்று நினைக்கிறேன். அல்லது நான் அப்படி யோசிக்கிறேன் போல. என் பிள்ளைகள், அக்காக்களின் பிள்ளைகள், இல்லை எனக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு செல்லப்பெயர் வைப்பது வழக்கம். ரோசி அக்காவின் கடைசி மகன் சூரியன். நான் அவரைப் பூரியன் என்று கூப்பிடுவேன். அவர் எப்போதும் “நிதா ஆன்ட்டி, என் பெயர் பூரியன் இல்லை சூரியன்” என்பார். நான், “எனக்கு சூ வராது என்பேன்.” இந்தக் குணம் தான் கதையில் வருகிறது போலும்.
அது உங்களுக்குப் பிடித்திருப்பதில், நீங்க ரசிப்பதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

Akka neenga romcom genre la story eluthirukeenglaa?
இதுவரைக்கும் இல்லை. ஆனா விருப்பம் இருக்கு. அதுக்கு நான் சரி வருவேனா என்கிற கேள்வியும் இருக்கு. ஆனால் ஒன்று ரொமான்ஸ் கொமடி என்று வருகையில் அது தானா அமையோணும். அப்பதான் இயல்பா அழகா ரசிச்சுச் சிரிக்கிற மாதிரி இருக்கும். அப்படி ஒரு கருவும் எழுதும் பாங்கும் அமைந்தால் ஆசையாய் எழுதுவேன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: Hai Sister, முதலில் "நிதனி" என்ற உங்கட பெயரில் கவரப்பட்டு தான் stories வாசிக்க ஆரம்பித்தேன் but இப்ப நான் mostly உங்கட எல்லா கதையையும் படித்து இருக்கிறேன். என் சோலைப் பூவே, திருடிய இதயத்தை திருப்பிக் கொடு, உயிரைத் திருடும் அழகியே இந்த 3கதைகளும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அழகான உரைநடை, எளிமையான கதைக்களம், இடங்களை வர்ணிக்கும் அழகு, உயிரோட்டமான கதை, என்று உங்கள் கதைகளின் விசேடங்களை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்க Sri Lanka, Colombo வந்தால் உங்களை சந்தித்து ஒரு படம் எடுத்து, "with my favouritewriter" என்று fb la upload பண்ணும்.May I?.
மிக்க மிக்க அன்றி உங்களின் அன்புக்கும் பாராட்டுக்கும் பிடித்த கதைகளைப் பகிர்ந்து கொண்டதற்கும்.
என் முழுப்பெயர் நிதர்சினி. அதிலிருந்து பெயர்த்தவைதான் நிதா, நிதனி, நிது எல்லாம்.
நிச்சயமாக இலங்கை வந்தால் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன். அப்படியே என் எழுத்தை நேசிக்கும் அன்பு வாசகியோடு என்று நானும் போட்டோ பகிர ஆவலாகவே இருக்கிறேன். மீண்டும் நன்றி!
நீங்க Sri Lanka, Colombo வந்தால் உங்களை சந்தித்து ஒரு படம் எடுத்து, "with my favouritewriter" என்று fb la upload பண்ணும்.May I?.// போட்டோ எடுக்கிறோம் போடுறோம்
 

நிதனிபிரபு

Administrator
Staff member

இதைக் கேள்வி என்று சொல்லமுடியவில்லை. என் எழுத்துக்கான ஒரு அன்பு எனலாம்.
ஹாய் மா நான் பிரளயத்தால் தான் கதைகள் படிக்க ஆரம்பிச்சேன் உங்கள் கதைகளில் முதலாவது படிச்சது சோலைப்பூவே அப்படியே எல்லாம் படிச்சேன் அதுல நிறைய கற்றுக்கொண்டேன் அதுலயும் நம் நாட்டு இடங்களை கூட வவுனியா சமையல் காலி கோட்டை யாழ்ப்பாணம் என்று அழகு அற்புதமா சொல்லிருப்பிங்க ஒவ்வொருகதை நகர்விலும் திடிர் திருப்பம் இருக்கும் ..எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னொறு கிப்ட் நீங்க தந்தது பன்டாரவன்னியன் புத்தக சாலை கார்திபன் அண்ணா அறிமுகம் அற்புதம் உங்களுடைய புத்தகம் நினைவாகிட வந்தேன் நான் அது என் தோழருக்கு பரிசாக்கிடுவேன் அண்ணாவே அனுப்பி வைப்பாரு நான் சொல்லுற வரிகளையும் எழுதி ..செம்ம மா நிறைய புத்தகத்தோடு எனக்கு இணைப்பை தந்தது நீங்க மா..இப்போதைக்கு . உயிரை திருடும் அழகியே, திருடிய இதயத்தை திருப்பி கொடு கை வசம் எடுத்துருக்கேன் ..இனியும் மீதமானதையும் எடுப்பேன் ..நினைக்குறபோ படிக்கேழும். தெவிட்டாது மா அத்தனை தத்ரூபமானது ..இரண்டு பக்க நியாயம் தருவிங்க ..அழகா இருக்கும் அதுவே திருப்பமாவும் இருக்கும் படிச்ச தாக்கம் மனசோடு நிற்கும் மாறவோ மறக்கவோ முடியாதுமா ..பூவே பூச்சூடவா எத்தனை திருப்பம் ..ஆரணி நீண்டது வாவ் நிறைய அழகு .. இன்னும் ஏறாளமா நீங்க எழுதனும் தாரளமா நாங்க படிப்போம் மா .. காதல் காயங்கள் கதை ரொம்ப அழகு ..ஒன்றையுமே மட்டுபடுத்தி சொல்ல முடியாது மா, ஒவ்வொன்றிலும் நீண்டதொரு தாக்கம் இருக்கும் ..தனிமை துயர் முதல் தரம் படிச்சப்போ அழுது கூட இருக்கேன் ..சில நேரம் வாழ்க்கையோடு மீட்டு படி இருக்கும் மா. நன்றிகள் மா புத்தகசாலையோடு இணைச்சதுக்கு ..வாழ்த்துக்கள் மா நிறையே எழுத ..வாழ்த்துக்கள் மா ..நன்றிகள் மா
—----
மிக்க மிக்க நன்றி. வேற என்ன நான் சொல்லட்டும்? சில நேரங்களில் வார்த்தைகள் இல்லாமல் திணறுவோம். அப்படி ஒரு தருணம்தான் இது. உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றி.
பண்டாவன்னியன் புத்தகசாலையின் தம்பி கார்த்திபனின் அறிமுகம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. அவரால்தான் இலங்கையில் ‘இங்கே என் புத்தகங்கள் கிடைக்கும்’ என்று என்னாலும் உறுதியாகச் சொல்லக்கூடிய மாதிரி அமைத்திருக்கிறது.
அதேபோல குயீன்சி புத்தகக் கடையிலும் என் புத்தகங்கள் கிடைக்கின்றன. இது எனக்கே ஒரு ஆனந்த அதிர்ச்சிதான். இத்தனை நாள்களாக எனக்கும் தெரியாமல் இருந்தது. இலங்கை சென்ற ஒரு தோழி போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார். அதற்கு என்று தனியாகப் பதிவு போடவேண்டும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

Hi akka.This is leelavathi Chandrasekhar .Nan ungalin ezhuthukku theevira rasigai, adimai nu kooda sollalam. தமிழ் mozhiyin inikkum thanimaiyai unga kadhaila nan anubavichi irukkan. Enakku unga kitta pidicha vishayamaey- unga kadhaigalla vara practicality, social responsibility and reality dhan. Nariya others novels padikkumbodhu idhellam unmaiya enga nadakudhu, nadakkamari ezhudhuna nalla irukkum nu yosichu irukkan. Indha aasaiya unga kadhaila nan feel panni irukkan.Thank you for that.Ipdi ppl um irukkaranga nu unga ezhuthula enna eppayum convice panni irukkenga. So ungaloda oru story um vidamattan. U r my most favourite author. Neenga story ezhudhumbodhu nyayama irukkanum nu oru bayathoda ezhudhuveenga nu nan think panran becoz adha unga stories la nan feel panni irukkan. Unga kitta enakku pidikkadha vishayam rhomba kammi stories dhan irukku adhan.ungaloda stories la sila plot pudikkum siladhu pudikkadhu(rhomba normal ah irukkum) but ezhuthunadai and gripping ah ezhuthi manasa alliduveenga. Manasu seri elladha samaiyam unga stories padichi thelinjirukkan, thank you. Prayers for your good health, peace,success and happiness in ur life..
—------------------------
ஹாய் லீலா, மிக்க மிக்க நன்றிமா. //Enakku unga kitta pidicha vishayamaey- unga kadhaigalla vara practicality, social responsibility and reality dhan.// இந்த வார்த்தைகளுக்கு இன்னுமொருமுறை நன்றி.
Neenga story ezhudhumbodhu nyayama irukkanum nu oru bayathoda ezhudhuveenga nu nan think panran becoz adha unga stories la nan feel panni irukkan.// நிச்சயமா மா. ஒரு சொல்லுக்காக கூட நிறைய நாட்கள் யோசிச்சது எல்லாம் இருக்கு. இந்தச் சொல்லை இந்த இடத்தில் போடலாமா, இது பொருந்துமா, இல்லை வேறு பொருள் தருமா என்று நிறைய. ரோசி அக்காவும் நானும் சீன்ஸ்க்காக, வார்த்தைகளுக்காக, வசனங்களுக்காக என்று நிறைய நிறையக் கதைப்போம். அதை எழுதலாமா, அது வேறு என்ன பொருளில் எல்லாம் போய் சேர முடியும் என்று இரவிரவா யோசிச்சு அடுத்த நாள் விடிய பாத்ரூமிற்குள் இருந்து அவாக்கு நானும் எனக்கு அவாவும் வொயிஸ் மெசேஜ் அனுப்புகிற நிகழ்வுகள் எல்லாம் எங்களுக்குள் தாராளம். இப்போது நான் எழுதிக்கொண்டு இருக்கும் கதைக்காக இரண்டு நாள்களுக்கு முதல் கூட இது நடந்தது.
கதைதானே, சும்மா பொழுது போக்கிற்கு வாசித்துவிட்டுப் போவதற்குத்தானே என்று பொதுவில் எல்லாரும் சொல்லுவார்கள். நாமே அப்படி நினைத்து வாசித்தாலும் நமக்கே தெரியாமல் பல விசயங்கள் நம் ஆழ் மனதில் போய்ப் பதியும். அப்படி இருக்கையில் கதைதானே என்று சாதாரணமாக என் எழுத்தை என்னால் நினைக்க முடிவதில்லை.
அந்தப் பயம் இருக்க வேணும் என்று நினைக்கிறேன். அதன் பெயர்தான் பொறுப்பு. எழுதுறது பிரீ, போஸ்ட் பண்ணுறது பிரீ, என்னைக் கண்காணிக்கவோ, தவறு என்று என் எழுத்தைச் சுட்டிக் காட்டவோ யாரும் இல்லை என்பதற்காக வருவதை எல்லாம் எழுதுவது தவறு தானேம்மா.
பொறுப்போடும் கவனத்தோடும் பயத்தோடும் ஒன்றை நாம் செய்யும்போது அது தரமானதாகவும் இருக்கும்.
அருமையான கேள்வி கேட்டதுக்கு மிக்க நன்றிமா.
//Unga kitta enakku pidikkadha vishayam rhomba kammi stories dhan irukku adhan.ungaloda stories la sila plot pudikkum siladhu pudikkadhu(rhomba normal ah irukkum) but ezhuthunadai and gripping ah ezhuthi manasa alliduveenga.//
ஹாஹா உண்மையா எழுத வந்து 10 வருடங்கள். ஆனால் 24 கதைகள்தான் என்று எனக்கும் அது கொஞ்சம் கவலை தரும் விசயம்தான். இனி அதைக் கொஞ்சம் கவனிக்க இருக்கிறேன்.
நோர்மலா இருக்கும் என்று சொல்லும் கதைகள் எழுத காரணம் அதற்கு முதல் அழுத்தமான ஒரு கதை எழுதி இருப்பேன். நீங்க ஏற்கனவே சொன்னதுபோல நிறைய யோசிச்சு, நிறைய முயற்சி செய்து உண்மையில் ஒவ்வொரு கதைக்கும் மனத்தால் நான் உழைப்பது மிக அதிகமாக இருக்கும்.
அதனாலேயே நிறைய யோசிக்க தேவை இல்லாத, பீல் குட் கதை ஒன்று எழுதி என்னை நானே திரும்பவும் மீட்டு எடுப்பேன். அதுதான் அந்தக் கதைகள் வருவதற்கு காரணம். நன்றிமா மனதில் இருந்து சொன்னதற்கு.
//Manasu seri elladha samaiyam unga stories padichi thelinjirukkan, thank you. Prayers for your good health, peace,success and happiness in ur life..//
இந்த அன்புக்கு மிக்க மிக்க நன்றிமா.
உண்மையில் மனதுக்கு மிக நிறைவான ஒரு பகிர்வு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

தான் ஒரு முன்னாள் எழுத்தாளர்ன்ற எந்தவித ஈகோவும் இல்லாம புதுசா வந்த எழுத்துக்களை வாசித்து எழுத்தாளர்களை ஊக்கிவிக்குறீங்க நிதனிமா நீங்க
?
You are a good writer & reader and good soul as well
?

மிக்க நன்றியும் அன்பும்மா. இதுல ஈகோ என்னத்துக்கு என்னம்மா? முதல் விசயம் நானும் அதே பீல்டில் இருக்கிறதால ஒரு சின்ன பாராட்டு எந்தளவில் மகிழ்விக்கும் எண்டு தெரியும்.
ரெண்டாவது தகுதியே இல்லாத கதைகளை ஆகா ஓகோ எண்டு சொல்லும்போது நியாயமா ஒரு கதைக்குக் கிடைக்க வேண்டிய பாராட்டைக் கொடுக்காமல் இருக்கிறது அந்தக் கதைக்கு நான் செய்யும் அநியாயமா நினைக்கிறேன்.
மூன்றாவது நல்ல கதைகளைப் பாராட்டும்போது அந்த எழுத்தாளர் இன்னும் ஊக்கமாக எழுதுவார். சோ எனக்கும் வாசிக்க இன்னொரு நல்ல கதை கிடைக்குமே என்கிற ஒரு எதிர்பார்ப்பு.
அதோட, ஆரம்ப காலம் எழுதுற எண்ணம் எனக்கு இருக்கவே இல்லை. முகம் தெரியா யாரோ சொன்னார்கள் எழுதினேன். முகம் தெரியா யாரோ எல்லாரும் பாராட்டினார்கள், தொடர்ந்து எழுதினேன். இப்படி என் எழுத்துப் பயணத்திலும் எந்தப் பலனையும் எதிர்பாராமல் யார் யாரோ தந்த ஊக்கம்தான் நான் இண்டைக்கு தொடர்ந்து எழுதக் காரணம். எனக்கு யாரோ செய்ததை நான் இன்றைக்கு யாரோவா நின்று செய்றேன். அவ்வளவுதான். அதில் எனக்குச் சந்தோசமும் கூட.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: நீங்கள் போர் பூமியில் வாழ்ந்தவர்கள். காதல்+ போர் கலந்த கதை எழுதும் எண்ணம் இருக்கிறதா நிதா சிஸ்.

ஏற்கனவே ஒன்று எழுதி இருக்கிறேன். குறுநாவல். நீ வாழவே என் கண்மணி என்கிற பெயரில். அமேசானில் இருக்கு.

இன்னும் எழுத விருப்பம் இருக்கா என்று கேட்டால் நிச்சயம் இருக்கு. அதே நேரம் பயம் எனக்கு. உண்மையாவே அந்த நாள்களை எல்லாம் யோசித்து, அந்த வலிகளை எல்லாம் அனுபவித்து திரும்ப எழுதும் அளவுக்கு எனக்குத் தைரியம் இல்ல.

ஆனா எழுதோணும். எப்பவும் எனக்கு ‘என்னால் முடியாது’ என்று நானே நினைப்பது பிடிக்காது. அது என்ன முடியாது? உன்னால் முடிய வேண்டும் என்று நினைப்பேன். பாப்பம்… எழுத வேணும். எழுதுவன். ஆனா என்றைக்கு என்று தெரியாது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நீங்க உங்கள் கதைகளில் இந்த topic பற்றி கண்டிப்பாக எழுதுவேன் என்பதும் எழுத விரும்பாத விசயம் ?

எழுத விரும்பாத விசயம்: பெண்களை இழிவு படுத்தும் எதையும் என் வாழ்க்கையில் என்றும் எழுதமாட்டேன். அப்படி எழுதுகிறவர்கள் மீதும் மதிப்பில்லை எனக்கு.

இந்தத் தலைப்பைப் பற்றி எழுதுவேன் என்று குறிப்பா எதுவும் இல்லை. எல்லாம் எழுதுவேன். எல்லாம் எழுத விருப்பமும். இப்ப சமீபமா எழுத வேணும் என்று நினைத்திருக்கிறது ரெண்டு விசயம்.

ஒன்று தவறான வாழ்க்கை. அதாவது மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணோடு உறவு வைக்கும் ஆண்களைப் பற்றி. அதற்குக் காரணம் பல கதைகளில் கட்டப்படுகிற சப்பைக் கட்டுகளை வாசித்து வாசித்து வந்த கோவம். நாம் பெண்களாக இருந்துகொண்டு, ஒரு ஆண் இன்னொரு பெண்ணைத் தேடிப் போவதற்கு பெண்ணே காரணம் என்று எழுதுகிறோம் இல்லையா. இதைவிடவும் மோசமா வேற என்ன இருக்கு என்று நினைப்பேன். அது அவரவர் யோசனையற்ற பார்வை என்று என்னை நானே சமாதானம் செய்து கொள்வேன். அதனாலேயே என் கதைகளில் அதைப் பற்றி எழுத விருப்பம். உதாரணமா பல்லவி கதையில் அவள் தன் தகப்பனைக் கடைசி வரையிலும் மன்னிக்கமாட்டாள்.

இது பழைய கருதான் என்றாலும் அதில் சொல்ல நிறைய இருக்கு என்பது என் எண்ணம்.
அடுத்தது தற்போதைய காலத்தில் பெண்களின் கை சற்றே ஓங்கிக்கொண்டு வருகிறது. அது வரவேற்கத் தக்க ஒன்றுதான். ஆனால், அதனாலேயே ஆண்களை வதைக்க நினைப்பது தவறு. ஆண்களின் பக்கம் நாம் நிறைய கதைக்கவில்லையோ என்று இப்போதெல்லாம் நினைக்க ஆரம்பித்திருக்கிறேன். அந்த யோசனையால் உண்டானதுதான் வெளிச்சக்கீற்று.

உங்களுக்கே தெரியும் அக்கா, வெளிச்சக்கீற்றின் கரு இரண்டு விடயங்கள். ஒன்று மேலே சொன்ன ஒரு ஆணின் நிலை. ரெண்டாவது பெண் தனக்கானதை தானே தேடிக்கொள்வதில் தவறில்லை, அதை இந்தச் சமூகம் இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழகட்டும் என்பது.

மிக்க மிக்க நன்றி அக்கா. இரண்டு வரிக் கேள்விதான். ஆனால் அதற்குள் பகிர நிறைய இருந்தது.


 

நிதனிபிரபு

Administrator
Staff member

Jaffnala unga collection enga edukalaam?

தற்போதைக்கு யாழ்ப்பாணத்தில் எங்கு என்று எனக்கும் தெரியாது. ஆனால், வவுனியா பண்டாரவன்னியன் புத்தகசாலையில் கிடைக்கும். நீங்க அவரோடு தொடர்புகொண்டால் வீட்டுக்கே அனுப்பி வைப்பார். அப்படி நிறையப்பேர் எடுத்திருக்கிறார்கள். மட்டக்களப்பு வரையிலும் பார்சல் போயிருக்கிறது.

அடுத்ததாக குயீன்சி புத்தகக்கடையிலும் என் புத்தகங்கள் கிடைக்கின்றன.

இரண்டு கடைகளினதும் விவரம் தாறன். வாங்குங்கோ.

Quency distributors: +94 77 226 8486
 

நிதனிபிரபு

Administrator
Staff member

Hi akka. Nan already ketathu than. Eppo university life la nadakura moments, events including love lam vechi story elutha poaringa?

உன் அன்புக்கு நன்றி கொஞ்சம் அந்தச் சாயல்தான் மா. ஆனா உங்க ஆசையை முழுமையாகப் பூர்த்தி செய்யுமா தெரியாது. ஆனால், முன்பாதி பல்கலைக்கழகம் தான்.
 
Top Bottom