• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மீண்டுமொரு தேத்தண்ணி வித் நிதா

நிதனிபிரபு

Administrator
Staff member
யாருக்காவது ஏதாவது கேள்விகள் கேட்க விருப்பம் இருந்தால் கேட்கலாம். எப்போதும்:




இது முதல் கேள்வி: Vikram 2 eppo varum akka
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் கதை எழுதிய நாள்களில் டெனிஷ், சந்தனாவை வைத்துக் கதை எழுதும் விருப்பம் இருந்தது உண்மை. பிறகு பிறகு அதை மறந்தே போயிட்டேன். இப்ப திரும்ப ரீ ரன் பண்ண ஆரம்பித்தபோது பிளாஷ் மாதிரி சில காட்சிகள் அந்தக் கதைக்கு வந்து போனதும் உண்மை.
எழுதுவேனா, எப்ப என்கிற கேள்விகளுக்கு இப்போதைக்குப் பதில் இல்லை. காரணம், அடுத்தடுத்து நிறையக் கதைகள் எழுத மைண்ட்ல இருக்கு. அதெல்லாம் முடிந்து, எப்பயாவது பீல் குட் ஸ்டோரி எழுதும் விருப்பம் வந்தால் நிச்சயம் எழுதுவேன்.
கூடவே விக்ரமின் பிள்ளைகள் எனும்போது கவிதையாய், காதலாய் மட்டுமே அந்தக் கதை இருக்க முடியும். அதற்கென்று ஒரு மைண்ட் செட் நிச்சயம் வேணும். என்றைக்கு அமையுதோ அன்றைக்கு டெனிஷ் நாயகனாய் வருவான்.
கேள்விக்கு மிகுந்த நன்றி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: உங்கள் ஏதாவது ஒரு நாவலை உங்கள் கையெழுத்துடன் பெற்றுக் கொள்ள பேரவா.
அப்படி ஒரு நிகழ்வு நடக்குமாக இருந்தால் உங்கள் அளவுக்கு நானும் மகிழ்வேன். என்றாவது இந்தியா வர முடிந்து, நாம் சந்திக்க முடிந்தால் நிச்சயமாய் இது நடக்கும்.
உங்கள் அன்புக்கு என் அன்பும் நன்றியும்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: எனக்குப் பிடித்த மிக அழகான கேள்வி.
ஹாய் சிஸ், உங்க கதை mostly எல்லாம் படித்திருக்கேன்.அவள் ஆரணி,ஏனோ மனம் தள்ளாடுதே,நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த கதைகள்,எத்தனை முறை படித்தாலும் சலிக்காது.உங்க கதைகள்ள வருகிற கதாபாத்திரங்கள் எல்லாருக்கும் அவங்கவங்க பக்க நியாயத்தை அழகா சொல்வீங்க உதாரணமா யாஸ்மின் பண்ணது தப்பு ஆனா அவ பக்கம் போய் பாத்தா அது சரி.ஒவ்வொருதருடைய point of view மாறுபடும்.உங்க கதாபாத்திரம் யாரையும் வெறுக்க முடியாது.நிறைய வாழ்க்கைல அனுபவபட்டவங்களால்தான் யாரையும் வெறுக்கவோ,குறை சொல்லவோ முடியாது.உங்க வாழ்க்கைல எப்படி தோழி?எனக்கு இலங்கை தமிழ் மிகவும் பிடிக்கும்.கேக்க பாட்டு மாதிரி இருக்கும்
❤️
❤️
❤️
❤️
❤️
❤️
இன்னும் நிறைய ஆக்க பூர்வமான கதைகள் எழுத என்னுடைய வாழ்துகள் தோழி
?
?
?
?
❤️
❤️
❤️
❤️
❤️

முதலில் உங்கள் பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
அடுத்தது, //நிறைய வாழ்க்கைல அனுபவபட்டவங்களால்தான் யாரையும் வெறுக்கவோ,குறை சொல்லவோ முடியாது.உங்க வாழ்க்கைல எப்படி தோழி?//
அனுபவப்பட்டேன் என்று சொல்லுறதை விட எனக்கு முன்னால இருக்கிற நபரின் இடத்தில இருந்து யோசிக்கிறது எனக்கு இயல்பாய் வரும்.
மற்றது, எல்லோருமே குறைகளும் குற்றங்களும் நிறைந்த மனிதர்களே என்கிற எண்ணம் எனக்கு உண்டு. மனிதர்கள் சில தவறான காரியங்களைச் செய்யலாம். அதற்காக அவர்கள் தவறானவர்கள் என்று அர்த்தம் இல்லை. இதுவும் என் கருத்து. யாஸ்மின் கூட அப்படியான ஒருத்தி.
நான் செய்தது பிழை எண்டு தெரிய வருகிற அந்தக் கணம் வரைக்கும் நான் செய்தது சரி எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருப்பம் இல்லையா? அப்படித்தான் தவறு விடுகிறவர்களும். தமக்குச் சரி எண்டு பட்ட ஒன்றை, அல்லது தமக்கு நல்லது என்று பட்ட ஒன்றைச் செய்றாங்க. நான் என் பாத்திரங்களையும் அவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்று காட்ட நினைப்பது இல்லை. அவன் சந்தர்ப்ப சூழ்நிலை இது. அதனால் அவன் இதைச் செய்தான் என்று மட்டுமே சொல்லுவேன். அவன் எப்படியானவன் என்கிற முடிவை கதையை வாசிக்கிற ஒவ்வொருவரும் தனித்தனியாக எடுக்கட்டும் என்று நினைப்பேன்.
உதாரணத்துக்குப் பிரமிளா. அவள் பக்குவமானவள், பொறுப்பானவள், யோசித்து நடப்பவள், நல்லவள். ஆனால், அவளால் கூட மோகனன் வெளிநாட்டிலிருந்து எடுத்தபோது அவனை மன்னிக்க முடிய இல்ல. காரணம் அவள் வலி அப்படி. அவள் இழந்தது அப்படி. பலருக்கு அந்த இடம் அதிருப்தி. ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி ஒன்று ஒரு பெண்ணுக்கு நடக்கையில் அவள் அப்படித்தான் ரியாக்ட் செய்வாள். அவள் நல்லவள் எண்டுறதுக்காக அவளை ஓவர் நல்லவளாகக் காட்டக் கூடாது. அதுவே, கால ஓட்டத்தில் என் முகத்தில் முழிக்காதே என்று சொன்ன அவள்தான் நீ வருகிறாய் என்று உத்தரவாகச் சொல்கிறாள். இதுதான் மனிதர்கள். மனித மனங்கள்.
மற்றது மனித இயல்புகளை, நடவடிக்கைகளை சரி, பிழை அல்லது நல்லவர், கெட்டவர் என்று ஒவ்வொரு பெட்டிகளுக்குள் பிரித்துப் போட்டுவிட முடியாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அவரவர் பெட்டி மாறிக்கொண்டே இருக்கும்.
அவ்வ்வ்வ் நிறைய சொல்லிட்டேன் போல இருக்கு ஹாஹா.
//எனக்கு இலங்கை தமிழ் மிகவும் பிடிக்கும்.கேக்க பாட்டு மாதிரி இருக்கும்
❤️
❤️
❤️
இன்னும் நிறைய ஆக்க பூர்வமான கதைகள் எழுத என்னுடைய வாழ்துகள் // மனம் நிறைந்த நன்றியும் அன்பும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

நிறைய நாயகிகளின் கதையாக தருவதில் குறிப்பிட்ட காரணங்கள் உண்டா?
இதுவும் நல்ல ஒரு கேள்வி. இந்தக் கேள்விக்கு நிறையப் பதில்கள் உண்டு. முடிந்தவரை சுருக்கமாகச் சொல்லுறேன்.
ஒன்று, வேறு மாதிரி எனக்கு வருவதில்லை. உண்மையில் நானாக யோசித்து, அப்படி நாயகிகளைப் படைப்பதே இல்லை. அதுவா அமைந்துவிடுகிறது. அல்லது, அப்படித்தான் என்னால் எழுத முடிகிறது போலும்.
இரண்டாவது என் கதைகளை வாசிப்பது அதிகமாகப் பெண்கள். அதனாலேயே பெண்ணின் சிரமங்களை, அதை அவள் எதிர்கொள்ளும் வகைகளை, விடாமல் போராடுவதை, பெண் தன்னை எங்கெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை, அவள் விடும் தவறுகளை என்று பெண் பக்கம் நின்று சொல்வேன்.
ஒரு ஆண் தவறானவனாக இந்தச் சமூகத்துக்கு வருவதற்குப் பெண்களும் சரி பங்கு காரணமாக இருக்கிறார்கள் என்று ஆழமாக நம்புவேன். ஆக, மாற்றம், விழிப்பு எல்லாம் பெண்ணிடம் வர வேண்டும். அது இந்தச் சமுதாயத்துக்கு அவள் கொடுக்கும் ஆணிடம் பிரதிபலிக்கும் என்று நம்புவேன்.
தன் கணவன் தனக்கு அத்தனை அங்கீகாரங்களையும் தர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கும் எத்தனை பெண்கள் தம் மகன்களை அப்படியானவர்களாக வளர்க்கிறார்கள் என்று கேட்டால் அது பெரும் கேள்விக்குறிதான். என்னைக் கேட்டால் கணவனைத் தூக்கிப் போட்டுவிட்டு மகன்மேல் கவனத்தைச் செலுத்துங்கள் என்று சொல்வேன். ஹாஹா…
அடுத்ததாக எனக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.
ஆனால் எப்போதுமே மாற்றி எழுத வேண்டும் என்கிற ஆசை மலைபோல் உண்டு. என்ன, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? முயற்சிக்கிறேன், முடிந்தால் என் எழுத்தில் மாற்றம் நடக்கும் என்று நம்புவேன்.
மிக்க மிக்க நன்றி. ஆழமான பதில் சொல்ல வைக்கும் அருமையான கேள்விக்கு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

I have read all of your stories so far. Your writing style, your story lines and naration is always great. Please do not change anything for others.
இந்த அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க மிக்க நன்றி. நிச்சயமாக மாற்றும் எண்ணம் இல்லை. ஆனால், என்னிடம் எல்லாம் நிறைவாக மட்டுமே உண்டு என்று நான் நினைப்பதும் தவறுதானே. நம் குறைகள் நம் கண்களுக்குத் தென்படாமல் போவதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. அதனாலதான் கேட்டேன்.
இன்னும் முன்னேறுவதற்கும் என்னை மெருகேற்றிக் கொள்வதற்கும் உங்கள் கருத்துகள் நிச்சயம் எனக்கு உதவும். அதனால் மட்டுமே. மீண்டும் நன்றி!
 

நிதனிபிரபு

Administrator
Staff member

Akka, when is your next book comes in Amazon Kindle.
இப்ப ஒரு கதை எழுதிக்கொண்டு இருக்கிறன்மா. அது வரும். இல்லையா வெளிச்சக்கீற்று வரும். பெரும்பாலும் பெப்ரவரி நடுப்பகுதியில் புதுக்கதை போடுவேன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

Varthaigaigaluku uyirottam irukudhunu yarukachum proof pananum na unga story ae eduthu read pana solanum, na unga ela kadhai padikala padika try panran feel good ah irundha inneram mudichirupan but oru story mudicha andha feeling la irundhu veliya varave 1 week aahudhu, dialogue elam mind la store aaidudhu,
?
Srilankan Tamil la irukra dialogue la enaku atthupadi, enaku minus nu unga kita solanum na konjama ala vacha nala irukum
?‍?
mathapadi u have reached 99.9% all the best mam

மிக்க மிக்க நன்றி. உண்மையா என்ன சொல்ல என்று சொல்ல தெரியாம நிக்கிறேன். அழ வைப்பதை குறைக்கப் பாக்கிறேன். ஆனால், பெரும்பாலும் எனக்கு அப்படி எழுதினால் மட்டுமே எழுதிய திருப்தி கிடைக்கும். இல்லையா என்னவோ மிஸ் பண்ணுறேன், கதை நல்லா வர இல்ல என்று அங்கேயே நின்று சுற்றிக்கொண்டே இருப்பேன். ஆனாலும் முயற்சி செய்றேன்.
மீண்டும் நன்றியும் அன்பும். //Varthaigaigaluku uyirottam irukudhunu yarukachum proof pananum na unga story ae eduthu read pana solanum// அதுவும் இந்த வரிக்குப் பிரத்தியேக நன்றி!
 

நிதனிபிரபு

Administrator
Staff member

உங்க கதையின் நாயகிகளில் நிதா யாரு?அல்லது நிதாவை பிரதிபலிக்கும் குணங்கள் யார்கிட்ட எல்லாம் இருக்கு?.. ஆரணி and பிரமிளா என்னோட ரொம்ப பிடிச்ச நாயகிகள்
❤️
.....உங்க இலங்கைத் தமிழ்
❤️
❤️
அதிலும் அந்த என்னடியப்பா போன்ற வார்த்தைகள் எல்லாம்
❤️
ஹீரோ ஹீரோயின் உரையாடல் எல்லாமே
?
மனமார்ந்த நன்றி நிதா sis
❤️


ஹாஹா என் கதையின் நாயகிகளில் நிதா யார்? உண்மையா எனக்குத் தெரிய இல்லை. ஓரளவுக்கு இப்படி வைக்கலாம். வெளில நான் ஒரு பிரமிளா. வீட்டில கணவர் பிள்ளைகளுக்கு நான் ஒரு ஆரணி. ஹாஹா…

உண்மையில் ஒரு நாயகி என்று சொல்ல முடியாது. அத்தனை நாயகிகளில் இருக்கும் ஏதோ ஒன்று என்னிடம் இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவில் தேவையற்றுப் பயப்படுவது, அசட்டுத் துணிச்சல், அர்த்தமற்று அடங்கிப் போவது, நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று நினைப்பதெல்லாம் இருக்காது. அடுத்து என்கிற ஒரு சிந்தனை எனக்கு எந்தச் சூழ்நிலையிலும் இருந்திருக்கிறது.

இந்தக் குணங்கள் என் நாயகிகளில் பிரதிபலிக்கலாம்.
என் தமிழ் மீதிருக்கும் ஈடுபாட்டுக்கும் என் எழுத்தின் மீதிருக்கும் பிரியத்துக்கும் மிகுந்த நன்றி!
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி:என்ன படிச்சிருங்கீங்க... ?? என்ன வேலை பார்க்குறீங்க? கதை எழுத எது தூண்டியது? அல்லது ஏன் எழுத நினைச்சீங்க? எதனால ... அவ்வளவுதான்ப்பா , மத்தபடி நல்ல எழுத்து நடை, கதைக்கரு எல்லாம் சூப்பர்... நிறைய எழுதுங்க…

ஸ்கூல் முடிச்சிருக்கிறேன். அதாவது பன்னிரண்டாம் வகுப்பு கணிதப் பிரிவில் முடித்திருக்கிறேன். படிப்பு வராமல் படிப்பை விடவில்லை. அந்தக் காலத்தில் நாட்டில் நடந்த யுத்தத்தினால் எப்போதடா பதினெட்டு வயதாகும் என்று காத்திருந்து, படிக்காவிட்டாலும் பரவாயில்லை, மகள் எங்காவது உயிரோடு இருந்தாலே போதும் என்று எண்ணி அம்மா திருமணத்தை முடித்து வைத்து ஜெர்மனுக்கு பார்சல் பண்ணிவிட்டார்.

என்ன வேலை பார்க்குறீங்க?
இங்க கடை வச்சிருக்கிறோம்.

கதை எழுதத் தூண்டியது எது? உண்மையில் இன்னதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆரம்ப காலங்களில் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம்தான் என்று சொல்வது போன்று கதைகளுக்கு விமர்சனம் எழுதுவேன். குறை என்றால் இது குறைதான், நன்றாக இருக்கிறது என்றால் நன்றாக இருக்கிறது என்று இரண்டு பக்கத்தையும் நேரடியாகச் சொல்லிவிடுவேன். அப்படியான காலத்தில் கதை எழுதிப் பார்த்தால்தான் அதன் சிரமம் தெரியும், சும்மா வாசித்துவிட்டு வந்து விரும்பியதுபோல் விமர்சனம் செய்வார்கள் என்று ஒரு சிலர் சொன்னது, அப்படியா, எழுதித்தான் பார்க்கிறேன் என்று தூண்டியது. கூடவே, என் விமர்சனங்களில் இருக்கும் ஆழம் பார்த்த சிலர் கதை எழுதலாமே என்று தூண்டியது என்று ஒரு விளையாட்டாகத்தான் ஆரம்பித்தேன். அது இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஏன் எழுத நினைச்சீங்க? முதல் கதை உண்மையாகவே விளையாட்டாகத்தான் எழுதினேன். தொடர்ந்து எழுதும் எண்ணம் மருந்துக்கும் இல்லை. ஆனால், முதல் கதைக்குக் கிடைத்த பெரும் வரவேற்புத்தான் தொடர்ந்து எழுத வைத்தது. இரண்டாவது கதை எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு. அதை எழுதும்போது அந்தக் கதையோடும் எழுத்தோடும் உண்மையிலேயே மிகவுமே லயித்துப் போனேன். அந்தக் கதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன் இனி எழுதுவதை விடுவதில்லை, தொடர்ந்து எழுத வேண்டும் என்று. அவ்வளவில் எழுதுவது எனக்கு மிக மிகப் பிடிக்கும்.

//மத்தபடி நல்ல எழுத்து நடை, கதைக்கரு எல்லாம் சூப்பர்... நிறைய எழுதுங்க…// மிக்க மிக்க நன்றியும் அன்பும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member

அடுத்த கேள்வி: குறிப்பிட்ட கதைகள் என்று இல்லை. உங்களுடைய நிறைய கதைகளை வாசிச்சு இருக்கேன்.. பிடித்தமும் கூட ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு மாதிரி.. எல்லா கதைகளிலும் பெண் கதாபாத்திரத்தை உயர்த்தி உள்ளதுபோல் அமைத்து இருப்பீர்.. அதுபோல எல்லா கதைகளிலும் ஆண் கதாபாத்திரத்தை டாமினேட் போல அமைத்திருப்பீர்கள்.. பெண் கதாபாத்திரத்தையும் அதுபோல் அமைக்கலாம் இல்லையா.. அப்படி ஒரு கதைகளம் இருந்தால் எப்படி இருக்கும் என்று படிக்க ஆசை.. தோழி அமைப்பீர்களா?
மிக்க மிக்க நன்றி! பெண் பாத்திரம் டாமினேட் செய்வது போலவா கதை கேக்கிறீங்க? ஒரு வகையாக என் நாயகிகள் அப்படித்தானே இருப்பார்கள். இல்லையா? ஆனாலும் யோசித்துப் பார்க்கிறேன். நிச்சயமாக முயற்சிக்கிறேன். நன்றி.
 
Top Bottom