• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வல்லாரைச் சம்பல்

ரோசி கஜன்

Administrator
Staff member
வல்லாரைச் சம்பல்

1543521387244.png

தேவையான பொருட்கள்:


1 கட்டு வல்லாரை
1 பெரிய வெங்காயம்
1 பச்சை மிளகாய்
1 சிறு தக்காளி
ஒரு கைப்பிடியளவு துருவிய தேங்காய்.
ருசிக்கு உப்பு, எலுமிச்சைச் சாறு.

செய்முறை:


வல்லாரையைச் சுத்தம் செய்து, சிறிது நேரம் உப்பு நீரில் அமிழ்த்தி வைத்திருந்து நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

இனி, இதைத் துவையலாக அரைத்தும் எடுக்கலாம்.

வல்லாரை, தேங்காய்ப்பூ தவிர, மற்றவற்றை நன்றாக அரைத்துவிட்டு, பின், வல்லாரை, அதன் பின் தேங்காய் என்று சிறிது நீரும் சேர்த்துப் பசையாக அரைத்துக் கொள்ளலாம்.

அல்லது...

வல்லாரையை மிக மிக மெல்லிதாக அரிந்து கொள்ளுங்கள். அதேபோல் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி என்பவற்றையும் அரிந்து, மிகுதிப் பொருட்களோடு சேர்த்து நன்றாகப் பிசைந்தெடுத்தால், சம்பல் தயார் .
 
Top Bottom