தேவையான பொருட்கள்:
கோதுமை மா - 310 கிராம்
கொக்கோ பவுடர் - 1 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு (இவை நான்கையும் நன்றாகக் கலந்து இருதடவைகள்
அரித்து வைத்துக்கொள்ளுங்கள்)
பட்டர் - 115 கிராம் (அறை வெப்பத்திலிருக்க வேண்டும் )
சீனி - 300 கிராம்
முட்டை - 2
வெஜிட்டபிள் ஒயில் 200 கிராம்
வினிகர் - ஒரு தேக்கரண்டி
மோர் - 240 மில்லி லீற்றர்
வனிலா - 2 தேக்கரண்டி
சிவப்பு நிறக்கலர் - 1 மேசைக்கரண்டி. தேவையெனில் இன்னும் அரைக்கரண்டி சேர்க்கலாம்.

செய்முறை:
பட்டரையும் சீனியையும் நன்றாக மென்மையாகும் வரை அடித்துக் கொள்ளுங்கள்.
பின், அதோடு முட்டைகளை ஒன்று ஒன்றாகச் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். இப்போது பெரும்பாலும் சீனி கரைந்து
மென்மையான கலவை வந்திருக்கும். அதோடு எண்ணையைச் சேர்த்து அடியுங்கள். வினிகர் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையோடு மோரையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அடியுங்கள். இக்கலவை நன்றாகக் கலந்து மென்மையாக வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக மாக்கலவையைச் சேர்த்து மெதுவாக அடித்துக்கொள்ளுங்கள். பின், வனிலா கலரிங் சேர்த்து நன்றாகக் கலக்கும் வகையில் மெதுவாக அடித்துக்கொள்ளுங்கள்.
இப்போது கேக் கலவை தயார். இதனை கிரீஸ் பண்ணிய தட்டிலிட்டு 175C/350F வெப்பத்தில், 75-80 நிமிடங்கள் பேக் பண்ணிக் கொள்ளுங்கள். இரண்டாகவும் பேக் பண்ணிக்கொள்ளலாம்.
பேக் பண்ணியது நன்றாக ஆறியதும் பொங்கி வந்திருக்கும் மேல் பக்கத்தை வெட்டி அதை உதிர்த்து ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு கேக்கை சரிசமமாகத் தட்டையாக இரண்டாக்கிக் கொள்ளுங்கள்.
அலங்காரம்
தேவையான பொருட்கள்
கிரீம் சீஸ் - 400 கிராம்
ஐசிங் சுகர் - 200 கிராம்
வனிலா ஒரு தேக்கரண்டி.
இவை மூன்றையும் மென்மையாக அடித்துக் கொள்ளுங்கள் . இதனுள் அடித்து வைத்துள்ள 300 மில்லி லீற்றர் ஹெவி கிரீம் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்
இனி, கேக்கின் முதல் துண்டின் மேல்புறத்தில் இந்தக் கிரீமை நன்றாகத் தட்டையாக இட்டுவிட்டு, அதன் மேல் மற்றைய துண்டை வைத்து அதன் மேற்புறமும் சுற்றிலும் பக்கவாட்டிலும் கிரீமை பூசிக்கொள்ளுங்கள்.
பின்னர், உதிர்த்து வைத்துள்ள கேக் துகள்களால் மேல்பகுதி, பக்கவாட்டுப்பகுதி என்று அலங்காரம் செய்து கொள்ளலாம்.