• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நட் கோர்னர்ஸ் (Nut Corners)- இதழ் 5

ரோசி கஜன்

Administrator
Staff member
1543621101906.png
முதலில், மாக்கலவைக்குத் தேவையான பொருட்கள், நட்ஸ் கலவைக்குத் தேவையான பொருட்கள் என்று இரண்டு வகையில் தேவையான பொருட்களைத் தயார் செய்தல் வேண்டும்.

மாக்கலவைக்குத் தேவையான பொருட்கள்:
1543621193588.png

  • 250g மா
125g பட்டர்
  • 75g சீனி
  • 2 முட்டை
  • ஒரு பாக்கட் வனிலா
  • ஒரு பாக்கட் பேக்கிங் பவுடர்

நட்ஸ் கலவைக்குத் தேவையானவை:


  • 200g பட்டர்
  • 200g சீனி
  • 250g ஹாசல்நட்ஸ் சிறுசிறு துண்டுகளாக நொறுக்கியது.

1 பாக்கட் வனிலா
4 தேக்கரண்டி தண்ணீர்
3 தேக்கரண்டி Apricot jam
கடைசியாகத் தனியாக 150g சொக்லெட்ஸ்


செய்முறை:

மாக்கலவைக்காக எடுத்து வைத்த அத்தனை பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் குழைத்து கையில் ஒட்டாதபடிக்கு உருண்டையாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு பொலித்தீனில் சுற்றி ஒரு மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.

இப்போது நட்ஸ் கலவை செய்யும் முறையினைப் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தினை அடுப்பிலேற்றிச் சற்றே சூடானதும் நட்ஸ் கலவைக்காக வைத்திருந்த பட்டர் 200 கிராமினை பாத்திரத்திலிட்டு உருகவைக்கவும். நன்றாக உருகியதும் அதற்குள் சீனியைப் போட்டு நன்றாகக் கலந்துவிடுங்கள். சீனி கரைந்து நன்றாகக் கொதிக்கத் துவங்கிய பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி, அருவல் நொறுவலாக அரைக்கப்பட்ட ஹாசல் நட்ஸினை அதற்குள் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.

ஒரு மணித்தியாலம் கழித்துக் குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து எடுத்த மாக்கலவையினைச் சதுர அல்லது செவ்வக வடிவிலான பேக்கிங் தட்டில் நன்றாக உருட்டி எடுக்கவும். அதன்மீது அப்ரிகாட் ஜாமீனை தடவிவிடவும்.

அதன்மீது நாம் கலந்து வைத்திருக்கும் நட்ஸ் கலவையினைக் கொட்டி எல்லா பக்கமும் சரிசமமாகக் கலந்து பரவிவிடவும்.

1543621251244.png
180-200 பாகை செல்ஸியஸ் வெப்பத்தில் 25 தொடக்கம் 30 நிமிடங்கள் வரையில் விட்டு இறக்கவும். வெளியே எடுத்தபிறகு 5 நிமிடங்கள் ஆறவிட்டு, அதன்பிறகு சதுரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அந்தச் சதுரத்தினை முக்கோணத்துண்டுகளாக வெட் டிக் கொள்ளுங்கள்.
1543621274819.png

கடைசியாக, நாம் எடுத்துவைத்திருந்த சொக்லெட்டினை ஒரு பாத்திரத்திலிட்டுக் கொதித்த நீரின் மீது வைத்தால் உருகி களிபோன்று வரும். அதற்குள் முக்கோணத்துண்டுகளின் இருபக்க முனைகளையும் தோய்த்து எடுத்துக் கொள்ளவும். ஐந்து நிமிடங்களில் நமது நட்ஸ்கோர்னர் தயார்.

காலை நேரத்து கஃபே தொடங்கி மாலை நேரத்துத் தேநீர் முதல் என்று எந்த நேரத்துக்கும் பொருந்திவரும் வெகு சுவையான, குழந்தைகளுக்கு மிகவுமே பிடித்த பதார்த்தமாகும். ஆறியபிறகு காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டால் வாரம், பத்து நாட்களுக்கும் கெடாமல் இருக்கும்.
 
Top Bottom