தேத்தண்ணி வித் நிதா!
என்னைப்பற்றி, என் கதைகள் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் இங்கே நீங்கள் கேட்கலாம். என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த பதில்களை சொல்ல ஆவலாய் இருக்கிறேன்.
ஆகமொத்தம், 'வாங்க பழகலாம்!'
நட்புடன் நிதா
22.06.2022
------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் வணக்கம்!
கேள்வி ஏதாவது கேளுங்க என்று சொன்னா கேட்டு வச்சு இருக்கிறீங்க பாருங்க.. ஹாஹா உண்மையிலேயே பலதடவைகள் சிரித்துவிட்டேன். மிகவும் நிறைவாகவும் உணர்ந்தேன். என் எழுத்து வாசகர்களால் நேசிக்கப்படவேண்டும் என்பதுதான் என் அவா. ஆனால், அதே எழுத்து என்னையும் நேசிக்க வைத்திருக்கிறது என்பதை அறிந்து நெகிழ்ந்துபோனேன். அதற்கு, அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
பலர் என்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருப்பது தெரிகிறது! சரி வாங்க பழகலாம்!
நான் ஈழத்தைத் தாயகமாகக் கொண்டவள்! என்னுடைய முழுப்பெயர் நிதர்சினி. அது சுருங்கி நிதா ஆயிற்று. எழுத ஆரம்பித்தபோது பள்ளிக்காலத்தில் என் பெயராக இருந்த நிதனியை வைத்துக்கொண்டேன். கணவரின் பெயர் பிரபு. நிதனி + பிரபு = நிதனிபிரபு.
(ஒரு ரகசியம் சொல்லவா? கதைகள் வாசிப்பது தெரிந்தாலே திருமணமானவள் என்று கூடிப் பாராமல் விறகுக்கட்டையால் சாத்திவிடுவார் என் அம்மா. அவர் ஒரு நீலாம்பரி! எங்கள் பக்கம் எல்லாம் உருப்படாத பிள்ளைகள் செய்யும் காரியம் தான் கதை வாசிப்பது. அப்படித்தான் கணிப்பார்கள். ரமணி அம்மாவின் கதைகள் ஒளித்துப் படித்து வாங்கிக் கட்டிய அனுபவம் எல்லாம் நிறைய. அதனால், என் உறவுகள் யாரும் கண்டு பிடிக்கக்கூடாது என்று, அந்தக்காலத்தில் மரு ஒன்றை வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நம்பியார் வருவதுபோல நானும் ‘நிதனிபிரபு’ என்கிற மாறுவேடத்தில் கதை எழுத ஆரம்பித்தேன். ஆனால், அதை என் வீட்டிலேயே எனக்கெதிராக இயங்கும் ‘அக்கிரமம் நிறைந்த குரூப்’ அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டது. ஆச்சரியமோ ஆச்சரியம் அம்மா திட்டவில்லை. தரமாக எழுது என்று மட்டும் சொன்னார். அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும் ‘என்ர அம்மாவும் நல்ல மனுசி’ என்று!)
என் பிறந்த ஊர் எது தெரியுமா? பிரணவன் வாழ்ந்தானே அதே கிளிநொச்சி! அந்த இரணைமடுக்குளம் என் உயிர் சொந்தம்! அங்குதான் பிறந்தேன். ஆனால் வளர்ந்தது எல்லா ஊர்களிலும். நாட்டுப் பிரச்சனையால் சிறு வயதிலேயே கிளிநொச்சியை விட்டு வெளியேறி, காலி, கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா என்று எல்லா இடங்களிலும் வசித்திருக்கிறேன்.
உயர்தரம் வரைதான் படித்திருக்கிறேன். அதாவது, உங்கள் ஊர் ப்ளஸ் 2 என்று நினைக்கிறேன். கடந்த பதினாறு வருடங்களாக ஜேர்மன் வாசம். இரண்டு குழந்தைகள். ஒரேயொரு கணவர். மகனுக்கு 15 வயது. மகளுக்கு 13 வயது. கதைகள் வாசிப்பது என்பதை விட, ரமணிசந்திரனின் கதைகளை உயிருக்குள் நிரப்புவது நிரம்பப் பிடிக்கும்! நான் ஓர் ரமணித்தேனீ! இதுதான் என் பொழுதுபோக்கு. இப்போது கதை எழுதுவதை பொழுதுபோக்காக மாற்றியிருக்கிறேன்!
அவ்வளவுதான் நான்!
ஓகே! இனி மற்றைய கேள்விகளுக்கு வருவோம்!
Hai mam story super valtthukal nineivellam neeyagida vanthen story link tharamudiyuma please
மிக்க நன்றி! என் கதைகள் எல்லாமே அமேசானில் இருக்கிறது. ஒரு கதை புதிதாக எழுதிக்கொண்டு ஏற்கனவே எழுதிய கதை ஒன்றை ஒவ்வொரு அத்தியாயமாக பதிந்துகொண்டு இருக்கிறேன். நிச்சயமாக NNV யும் வரும். மிகுந்த நன்றி.
Hi nithani mam, we want serious love story like thanimai Thuyar theradho..I love that story..when u give that type of story?and where are uliving mam?pls say something about ur family mam?
‘அவள் ஆரணி’ உங்களின் ஆவலுக்குத் தீனி போடும் என்று நம்புகிறேன். கடந்த 16 வருடங்களாக ஜெர்மனியில் குப்பை கொட்டுகிறேன். மற்றும்படி என்னைப்பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். பாருங்கோ. நன்றி!
Unkal story rompa pedikum akka
மிக்க மிக்க நன்றிமா!
I want to see your face and full family too.its a kind of request to know abt my hero writer.
ஹாஹா! வீக்கெண்ட் அதுவுமா எதுக்கு பேயைப் பார்க்க ஆசைப்படுறீங்க? போட்டோ போடுறேன். ஏதாவது நடந்தால் கம்பனி பொறுப்பேற்காது
குட்டி கதைகள் மட்டுமே வருகிறது.ஒரு பெரிய நாவல் எப்போ கொடுப்பீங்க?
இதோ ஆரம்பித்தாயிற்று! அவள் ஆரணி வெகு விரைவில் வருகிறாள்.
when u repost 'ninaivellam neeyakida vandhean ' full story. i need to read it again.
நிச்சயமாக மறுபடியும் பதிவேன். ஆனால் எப்போது என்று எனக்கே தெரியாது. மிக்க நன்றி!
ஸ்தோத்திரம் சகோதரி ...இவ்வளவு தத்ரூபமாக எப்படி உங்களால் எழுத முடிகின்றது?
அவ்வ்வ்வ்வ்… றோஸ் றோஸ் ரோசாப்பூவே! பூவே நீயே! ஹாஹா அக்கா, காமெடி பண்ணுறன் எண்டு சொல்லிக்கொண்டு சீரியஸா அழ வைக்கிறேல்ல!
Sis next big love novel vaenum. Pratilipi la second story konjam thaan irunduchu. Anda link kedaikamal sis.
ஆரம்பிச்சுட்டேன் மா! அவள் ஆரணி. பிரதிலிபி ல EUU முழு நாவலும் இருக்கு, பாருங்க.
நிதா அக்கா ஒரு முறையாவது உங்கள் முகத்தைக் காண வேண்டும்.
எதுக்கு? விசப் பரீட்சை எல்லாம் வேண்டாமே!
very nice lovely story mam
மிக்க மிக்க நன்றி!
En solai poove ud podunga pls
அடப்பாவிகளா? ஏதாவது கேளுங்க என்றால் இங்கயும் ud கேக்குறீங்களே.. போட்டுட்ட்ட்டேன்!
நல்ல பிரெண்ட்லி ஆ பேசுறீங்க. ஆனாலும் நெருங்க கொஞ்சம் தயக்கமா இருக்கும். இதுல எது நீங்க?
எதுல எது நான்? சரியா விளங்க இல்லை. ஆனால், கேலி கிண்டல் சிரிப்பு எல்லாம் மிக மிகப் பிடிக்கும். ஆனால், தன்னிலை இறங்கி எங்கும் வரமாட்டேன். அதனால் சற்றே தயக்கம் வரலாம்..
Last edited:
