• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கொக்கிஸ்

ரோசி கஜன்

Administrator
Staff member
இலங்கையர்களின் பண்டிகை நாட்களில் நீங்கா இடம்பிடிக்கும் கொக்கிஸ் – நிதனிபிரபு

1543009198660.png

தேவையான பொருட்கள்:

250கிராம் அரிசிமா

1/2 கோப்பைத் தடிப்பான தேங்காய்ப் பால்

1 தே. கரண்டி சீனி

1/2 தே. கரண்டி உப்பு

சிறிதளவு மஞ்சள் கலர்

1 முட்டை (விரும்பினால்)

1/2 லீ. தேங்காய் எண்ணெய் (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் அரிசிமா, உப்பு, மஞ்சள் கலர், சீனி ஆகியவற்றை கலந்துகொள்ளுங்கள். பின்னர் முட்டையையும் சேர்த்து அதனோடு தேங்காய்ப் பால் விட்டு தோசை மா பதத்திற்குக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடி கனமுள்ள சிறிய தாச்சி ஒன்று சூடானதும், எண்ணெயைக் கொதிக்க விடவும். எண்ணெய் நன்றாகக் கொதித்ததும் கொக்கிஸ் அச்சை சூடேற்றுவதற்காக இரு நிமிடங்கள் எண்ணெய்க்குள் அமிழ்த்திப் பிடிக்கவும்.

பின்னர் மேற்பாகத்தில் படாதவாறு கொக்கிஸ் அச்சை மாவில் தோய்த்தெடுத்து கொதிக்கும் எண்ணெய்க்குள் வைக்கவும்.(மேற்பாகத்தில் மாக்கலவை படுமாயின் அச்சை வீட்டுக் கொக்கிஸ் கழன்று வராது.)

'உஷ்ஷ்ஷ் ..." என்ற சத்தத்துடன் எண்ணெய் பொங்கி கொக்கிஸ் பொரிந்து வரும்பொழுது அச்சிலிருந்து கொக்கிஸை அகற்றிவிட வேண்டும். (பழக்கப்பட்ட அச்சாக இருக்குமாயின் இரண்டு மூன்றுமுறை அச்சினை எண்ணெய்க்குள் அமிழ்த்தி எடுக்கையிலேயே அச்சிலிருந்து கொக்கிஸ் தானாகவே கழன்றுவிடும். இல்லையானால் முற்கரண்டி ஒன்றினால் அதனை மெதுவாகக் கழட்டி விடவும்). பொன் மஞ்சள் நிறத்தில் வந்ததும் வடி கரண்டியால் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் கடதாசியில் வைத்து ஆற விட வேண்டும்.

அழகான கொக்கிஸ் 'பூக்கள்' கிடைப்பதற்கு உத்திகள் சில:
1. கொக்கிஸ் முழுமையாகப் பொரியும் முன்பாக அச்சிலிருந்து அகற்றவிட வேண்டும்
2. ஒவ்வொரு முறையும் மாவினுள் தோய்ப்பதற்கு முன்னர் கொக்கிஸ் அச்சைச் சில செக்கன்கள் எண்ணெயில் அமிழ்த்தி வைக்க மறக்காதீர்கள்.
3. கொக்கிஸ் கடினமாக இருந்தால் முற்கரண்டியைப் பாவித்து அகற்றிக் கொள்ளலாம்

4. அடுப்பை மிதமான சூட்டில் வைத்திருங்கள்.
 
Last edited by a moderator:

emilypeter

Well-known member
இலங்கையர்களின் பண்டிகை நாட்களில் நீங்கா இடம்பிடிக்கும் கொக்கிஸ் – நிதனிபிரபு

தேவையான பொருட்கள்:

1/2 கோப்பைத் தடிப்பான தேங்காய்ப் பால்

1 தே. கரண்டி சீனி

1/2 தே. கரண்டி உப்பு

சிறிதளவு மஞ்சள் கலர்

1 முட்டை (விரும்பினால்)

1/2 லீ. தேங்காய் எண்ணெய் (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் அரிசிமா, உப்பு, மஞ்சள் கலர், சீனி ஆகியவற்றை கலந்துகொள்ளுங்கள். பின்னர் முட்டையையும் சேர்த்து அதனோடு தேங்காய்ப் பால் விட்டு தோசை மா பதத்திற்குக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடி கனமுள்ள சிறிய தாச்சி ஒன்று சூடானதும், எண்ணெயைக் கொதிக்க விடவும். எண்ணெய் நன்றாகக் கொதித்ததும் கொக்கிஸ் அச்சை சூடேற்றுவதற்காக இரு நிமிடங்கள் எண்ணெய்க்குள் அமிழ்த்திப் பிடிக்கவும்.

பின்னர் மேற்பாகத்தில் படாதவாறு கொக்கிஸ் அச்சை மாவில் தோய்த்தெடுத்து கொதிக்கும் எண்ணெய்க்குள் வைக்கவும்.(மேற்பாகத்தில் மாக்கலவை படுமாயின் அச்சை வீட்டுக் கொக்கிஸ் கழன்று வராது.)

'உஷ்ஷ்ஷ் ..." என்ற சத்தத்துடன் எண்ணெய் பொங்கி கொக்கிஸ் பொரிந்து வரும்பொழுது அச்சிலிருந்து கொக்கிஸை அகற்றிவிட வேண்டும். (பழக்கப்பட்ட அச்சாக இருக்குமாயின் இரண்டு மூன்றுமுறை அச்சினை எண்ணெய்க்குள் அமிழ்த்தி எடுக்கையிலேயே அச்சிலிருந்து கொக்கிஸ் தானாகவே கழன்றுவிடும். இல்லையானால் முற்கரண்டி ஒன்றினால் அதனை மெதுவாகக் கழட்டி விடவும்). பொன் மஞ்சள் நிறத்தில் வந்ததும் வடி கரண்டியால் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் கடதாசியில் வைத்து ஆற விட வேண்டும்.
Kerala achu murukku ithu
 
Top Bottom