• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதலே மீண்டும் வந்துவிடு.

Subamurugan

Well-known member
உறவுகளற்ற ஒற்றை மரமாய்
வெட்ட வெளியில் காத்திருக்கிறேன்
நட்டு வைத்த வாழையாய்
என் வாழ்க்கையில் மீண்டும் வந்துவிடு.

வெந்து தணியும் கானலாய்
பாலைவனத்தில் காத்திருக்கிறேன்
தோண்டத் தோண்ட பொங்கி வரும் நீரூற்றாய் மீண்டும் வந்துவிடு.

நித்தம் நித்தம் யுத்தம் செய்யும்
போர்க்களமாய் வாழ்க்கை முழுவதும்
போராடி அரண் இழந்து தவிக்கின்றேன் உன் அன்பில்
அரியணை ஏற்ற வந்துவிடு.

கடன் பட்ட கர்ணனாய்
மனம் கலங்கித் தவிக்கின்றேன்
நீ தந்த முத்தத்தின் மொத்தத்தையும்
அல்ல வட்டியை மட்டுமாவது
வாங்கிக் கொள்ள காதலே
நீ மீண்டும் வந்துவிடு.
 
Top Bottom