• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒருவேளை....

Sugiy

Member
என் கையில் ஒரு புத்தம் புதிய படப்புத்தகம்(சிறுவர் கதைப் புத்தகம்) சிக்கியது. மிக மிக அழகான அட்டைப்படம்! ஒரு சிறுமி வானத்து நட்சத்திரங்களை உற்றுநோக்கியபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோன்ற அட்டைப்படம். "ஒருவேளை" இதுதான் தலைப்பு. என்னைத் திறந்து பார் என்று அழைப்பு...
ஒவ்வொரு பக்கமாகத் திறந்து பார்க்கின்றேன்.....
என்ன மாதிரியாக உணர்கிறேன் என்று விபரிக்க முடியாது....
ஒரு சிறுவர் கதைப்புத்தகத்துள் ஒரு சிறுமிக்கான துணிவை, தன்னம்பிக்கையைத் தூண்டும் வரிகளை மிக எளிமையாக, சிந்திக்கத்தூண்டும் வகையில், கண்கவர் படங்களுடன் தந்திருக்கிறார்கள்...... இந்த வரிகள் எல்லாருக்குமே பொருந்தும்.
யேர்மன் மொழியில் : தலைப்பு - vielleicht
எழுதியவர் - Kobi Yamada

இதோ உங்களுக்காக.....

«நீ ஏன் இங்கிருக்கிறாய்» என்று எப்பவாவது நீ உன்னையே கேட்டிருக்கிறாயா?

நீ அது நீதான். உன்னைப்போல வேறொருவர் இதுவரை இருந்ததுமில்லை. இனிமேல் இருக்கப்போவதுமில்லை.

உன்னுள்ளே ஒளிந்துகிடப்பவையோ ஏராளம்.

ஒருவேளை,

இதுவரை யாருமே கண்டிருக்காத ஒன்றை நீ புதிதாகக் கண்டுபிடிக்கலாம்.

ஒருவேளை,

வானைமுட்டுமளவான ஏதோவொன்றை நீ கட்டலாம்.

உன் வாழ்க்கை உனக்கானது.

உன்னால் முடியுமென்று நம்பும் எல்லாவற்றையும் முயன்றுபார்.

உன்னால் பார்க்கமுடியும் என்று நினைப்பவற்றை எல்லாம் பார்.

நீ செல்லுமிடமெங்கும் உன் நம்பிக்கைகளையும், கனவுகளையும் எடுத்துச் செல். பயணங்கள் எப்பொழுதும் ஏதோவொன்றைக் கண்டடைவதற்கானவை என்பதை மறந்துவிடாதே.

ஒருவேளை,

ஒவ்வொருநாளும் அழகானது என்பதைப் பிறர் உணர நீ உதவிசெய்யலாம்.

இல்லையேல் சிலவேளை,

உன் உற்சாகத்தால் மற்றவரையும் உற்சாகப்படுத்தலாம்.

எல்லாவற்றையும் அன்போடே செய்.

உன் இதயம் சொல்வதைக் கேட்டு அதன் வழியே செல்.

ஒருவேளை,

நீண்ட காலமாக இருளில் கிடந்த இடங்களில் ஒளிபரவச் செய்வதற்காக நீ வந்திருக்கலாம்.

ஒருவேளை,

தனக்காகக் குரல்கொடுக்க முடியாதவற்றிற்குக் குரலெழுப்புவதற்காக வந்திருக்கலாம்.

ஒருவேளை,

உன்னால் மட்டுமே முடிந்த, உன் விசேட உதவிசெய்யும் ஆற்றலுக்காக வந்திருக்கலாம்.

சிலது உனக்குக் கடினமாக இருக்கலாம்,

சிலது கவலையளிக்கலாம்,

எப்பொழுதும் எல்லாம் இலகுவாகவிருப்பதில்லை.

சிலவேளைகளில் மிகக் கடினமானதாக உணரலாம்,

அவையெல்லாவற்றிலும் பின்னடைவைச் சந்திக்கலாம்.

கீழே வீழலாம்,

நீ தோல்வியுமடையலாம்.

ஆனாலும் முன்னதை விடப் பலத்தோடு நீ மீண்டெளவேண்டும்.

ஏனெனில், உனக்குத் தெரிந்ததை விடப் பலமடங்கு உன்னுள் ஒளிந்துள்ளன.

இந்த உலகத்திற்கு உன் திறமைகள், எண்ணங்கள் தேவைப்படுகின்றன.

ஒருவேளை,

நீ என்ன செய்யப்போகிறாய், யாராகவாகப்போகிறாய் என்பதை அறிய,

இப்பொழுதுதான் தொடங்கியிருக்கலாம்.

உன்னிடம் ஒளிந்துள்ள மிகவும் பலமானதும், மாயங்கள் நிறைந்ததுமான உன் திறமைகளில் ஏதேனுமொன்றை இதுவரை நீ உணராமலிருந்திருந்தால் என்ன செய்வாய்?

நீ குறிப்பிட்டுக் கூறுமளவிற்கான செயல்களைச் செய்வதற்குரிய எல்லாத் தகுதிகளையும் தாங்கி நிற்கிறாய்.

ஒருவேளை,

உன் திறமைகள் என்னவென்பதை நீ இன்னும் நீ உணராமலிருக்கலாம்.

ஒருவேளை,

நீ எவ்வளவு முக்கியமானவள் என்பதை உணராமலிருக்கலாம்.

ஒருவேளை, ஆம் ஒருவேளை,

இந்த உலகம் உன்னைப்போல ஒருவரின் வருகைக்காகக் காலாகாலமாகக் காத்துக்கொண்டிருந்திருக்கலாம்.

ஒன்றுமட்டும் நிச்சயம்,

அது நீ இங்கிருப்பது!

நீ இங்கிருப்பதால், எல்லாமே சாத்தியம்!
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member

தனக்காகக் குரல்கொடுக்க முடியாதவற்றிற்குக் குரலெளுப்புவதற்காக வந்திருக்கலாம்.

ஒருவேளை,

உன்னால் மட்டுமே முடிந்த, உன் விசேட உதவிசெய்யும் ஆற்றலுக்காக வந்திருக்கலாம்.

சிலது உனக்குக் கடினமாக இருக்கலாம்,

சிலது கவலையளிக்கலாம்,

எப்பொழுதும் எல்லாம் இலகுவாகவிருப்பதில்லை.

சிலவேளைகளில் மிகக் கடினமானதாக உணரலாம்,

அவையெல்லாவற்றிலும் பின்னடைவைச் சந்திக்கலாம்.

கீழே வீழலாம்,

நீ தோல்வியுமடையலாம்.

ஆனாலும் முன்னதை விடப் பலத்தோடு நீ மீண்டெளவேண்டும்.

ஏனெனில், உனக்குத் தெரிந்ததை விடப் பலமடங்கு உன்னுள் ஒளிந்துள்ளன.

இந்த உலகத்திற்கு உன் திறமைகள், எண்ணங்கள் தேவைப்படுகின்றன.

ஒருவேளை,

நீ என்ன செய்யப்போகிறாய், யாராகவாகப்போகிறாய் என்பதை அறிய,

இப்பொழுதுதான் தொடங்கியிருக்கலாம்.

உன்னிடம் ஒளிந்துள்ள மிகவும் பலமானதும், மாயங்கள் நிறைந்ததுமான உன் திறமைகளில் ஏதேனுமொன்றை இதுவரை நீ உணராமலிருந்திருந்தால் என்ன செய்வாய்?

நீ குறிப்பிட்டுக் கூறுமளவிற்கான செயல்களைச் செய்வதற்குரிய எல்லாத் தகுதிகளையும் தாங்கி நிற்கிறாய்.

ஒருவேளை,

உன் திறமைகள் என்னவென்பதை நீ இன்னும் நீ உணராமலிருக்கலாம்.

ஒருவேளை,

நீ எவ்வளவு முக்கியமானவள் என்பதை உணராமலிருக்கலாம்.

ஒருவேளை, ஆம் ஒருவேளை,

இந்த உலகம் உன்னைப்போல ஒருவரின் வருகைக்காகக் காலாகாலமாகக் காத்துக்கொண்டிருந்திருக்கலாம்.

ஒன்றுமட்டும் நிச்சயம்,

அது நீ இங்கிருப்பது!

நீ இங்கிருப்பதால், எல்லாமே சாத்தியம்!
நேர்த்தியான மொழிபெயர்ப்பு சுகிர்தா .வாசிக்கையில் எம்முள் பலமூட்டும் வரிகள் .

பகிர்வுக்கு மிக்க நன்றி!
 
A

Ajandha

Guest
எவ்வளவு அழகாக மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். அருமையாக இருக்கிறது சுகி.
 
Sugiy

Member
எவ்வளவு அழகாக மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். அருமையாக இருக்கிறது சுகி.
வாங்கோ அஜந்தா :) மிக்க நன்றி!
 
Top Bottom