• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எழு பெண்ணாய்!

Sukinathan

Active member
எழு பெண்ணாய்...
—————————

பெண்ணே..!
இன்னும்
புதுமைகள் காணும் உலகில்
பூவாய்த் தான்-உன்
பிரவேசமா...??

தடைகளைத் தகர்த்து நீ
விடைகளாய் விழித்தெழு..!
தைரியம் விதைத்து நீ
தரித்திரம் ஒளித்தெழு...!

தடங்களைப் பதித்து நீ
தரணியில் தளைத்தெழு..!
பதுமையாய்ப் பிறந்த நீ
புதுமைகள் படைத்தெழு...!

மாந்தரைப் படைக்கும் நீ
மடமைகள் களைந்தெழு..!
பாரதி கனவு நீ
பாரினை ஜெயித்தெழு...!

படைகளை நடத்த நீ
தடைகளை தகர்த்தெழு..!
சாதனை படைத்த நீ
சரித்திரம் விதைத்தெழு...!

பெண்ணே!
அடிமை எனும் விலங்கொடி..!
விடியல் எனும் தடம்பதி..!!
——/——/——-/——-/——-/——

இரணையூர் சுகி
 
Top Bottom