• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எள்ளுருண்டை

ரோசி கஜன்

Administrator
Staff member
எள்ளுருண்டை (Thala Guli)




1543602655097.png




தேவையான பொருட்கள்:

வறுத்த எள்ளு 1 கப்

சர்க்கரை (Jagerry) ½ கப் (நன்றாகப் பொடி செய்து கொள்ளுங்கள்)

வறுத்த தேங்காய் பூ( பதப்படுத்தி கடையில் விற்பது நல்லது ) ¼ கப்

கித்துள் கருப்பட்டி ½ கப்

துளி உப்பு



செய்முறை:

வறுத்த எள்ளு, துளி உப்பு இரண்டையும் உரலில் இட்டு ஏழெட்டு நிமிடங்கள் இடித்து, பின் பொடிசெய்த சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் வரை இடியுங்கள். இக்கலவையில் தேங்காய் பூவையும் சேர்த்து நன்றாகக் கலந்து இடித்துக்கொள்ளுங்கள்.

கித்துள் கருப்பட்டியில் சிறிது நீர் விட்டு பாகு காய்ச்சி(கம்பிப் பதம் வரத் தேவியில்லை) இக்கலவையை அதனுள் இட்டுக் கிளறுங்கள்.

இக்கலவை ஆறவிட்டு உருண்டையாகவோ நீளவாக்கிலோ பிடித்து பேக்கிங் பேப்பரில் சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.


 
Top Bottom