• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதழ் 11

ரோசி கஜன்

Administrator
Staff member
1574016668464.png

தீயாய் நீ....

தூரத்தில் ஓர் ஈனக்குரல்
துரத்துகின்றதே..
தூக்கத்தினையும் துடைத்தெறிந்து
துக்கத்தினை பரிசளிக்கின்றதே..
துடிதுடிக்க வதைத்த வஞ்சகனை
தூக்கிலிட்டாலும் நீ பட்ட
துன்பத்துக்கு ஈடாகாதே..
எங்கனம் கூறுவேன் உன்னிடத்தில்..
எதிர்மறை எண்ணங்களுடன்
எம்மத்தியில் உலாவரும் வக்கிரபுத்திக்காரனை
எதிர்த்து நிற்க கற்றுக்கொள்..
ஆண் எனும் ஆணவத்துடன்
அரிப்பெடுத்து அலையும்
அயோக்கியன் அத்துமீறினால்
அவன் ஆண் என்ற அடையாளத்தை
அழிக்கவும் தயங்காதே..
சாத்தான்கள் வாழும்
சாபத்துடனான இந்த சமூகம் நீ
சாதித்தாலும் சந்தேகிக்கும்
சரிந்தாளும் விமர்சிக்கும்..
சற்றும் யோசிக்காதே..
உனக்கான பாதுகாப்பு
உன்னிடத்திடத்தில் தான் உண்டு..
உன் தடுமாற்றம்
உன்னை வீழ்த்தும்..
உணர்ச்சிகளை என்றும் முன்நிறுத்தாதே..
உன் பலவீனங்களை அடுத்தவர் பலமாக்காதே..
உள்ளுணர்வு தட்டியெழுப்பும் போது
உன் அறிவினை பட்டை தீட்டு..
ஆபத்துகள் சூழ்ந்த உலகம் இது
அன்னியர் என்றால் எச்சரிக்கையாய் இரு..
அன்பானவர் என்றால் சற்று சந்தேகம் கொள்..
தீங்கு சூழ்ந்த பயணமிது பெண்ணே..
தீயாய் நீ இரு ..
தீயவர் அழிந்து போகட்டும்..


சமீரா
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பெண்ணியம்.



பெண்ணியம் பேசுதொரு கூட்டம்- அவர்கட்கு

பெண்களில் அதிகம் நாட்டம்

கண்ணியம் பேசுவார் அதிகம்- பின்

கற்பையும் பறிப்பவர் அவர்தான்.



கண்ணியம் என்றும் கற்பு என்றும்

கனிந்து கூறுவர் பாட்டில்- பின்

உண்மையை மறந்து உணர்வை இழந்து

உயிரைப் பறிப்பார் நாட்டில்.



எண்ணம் பொங்க புரட்சிக் கவிகள்

எழுதி வைப்பார் ஏட்டில்- பின்

கண்களைக் கட்டி கைகளைக் கட்டி

கன்னியை வதைப்பார் பாரும்.



மண்ணில் பிறந்த மாணிக்கம்

மங்கைகள் தான் என்பார்- பின்

மண்ணில் பெண்ணைப் புதைத்தும்

மகிழ்ச்சி காணுவார் கொடுமை.



அண்ணன் நானடி என்று கூறி

அன்பு செய்வார் பெண்மேல்- பின்

அண்மையில் நெருங்கி தங்கள்

ஆசையைத் தீர்த்திடப் பார்ப்பார்.



ஆண்கள் சிலரில் இப்படி உள்ளார்

அவசியம் அறியனும் பெண்ணே

தூண்கள் போலும் ஆடவர் உள்ளார்

தூயவர் அவர்கள் பெண்ணே.



தூண்டில் போடும் ஆண்கள் எல்லாம்

தூய ஆண்கள் இல்லை

ஆண்டவன் போலே காப்பவர் மட்டும்

அழகிய ஆடவர் ஆவார்.



மோகனன்
 

ரோசி கஜன்

Administrator
Staff member
பாய்ந்து கொள்(ல்)வோம்

செழித்த தமிழால் திமிராய்ச் சொல்லு

பழித்த உமக்குப் பணியோம் என்று!

அழித்த அவரின் ஆயுளைக் கொன்று

கழிந்த காலத்தைக் கணித்தல் நன்று!



துடித்து ஓடிடத் துரத்திக் கொல்லு

மடிந்து போயிட விரட்டித் தள்ளு

அடித்த அவரின் அடாத்தை வென்று

இடிக்கு(ம்) மிடியில் உடையனும் பல்லு!



பூமியில் வாழும் பூதங்கள் எல்லாம்

சாமியின் காலில் சாம்பலாய்ப் போயிட

சேமித்த எங்கள் செந்தழல் வீரம்

பூமியை ஆண்டிடப் புகழாரம் சூட்டு!



பாய்ந்து ஓடும் பாய்நதி போல்நாம்

காய்ந்த நிலத்தைக் கனிவாய் மாற்ற

சேய்கள் நாங்கள் செறிவாய்ச் செய்வது

பேய்களை ஒழித்துப் பெருமை சேர்ப்பதே!

-மோகனன்
 
Top Bottom