• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

வட்டிலப்பம்

ரோசி கஜன்

Administrator
Staff member
'வட்டிலப்பம்' இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதுவும் முஸ்லீம் மக்களின் நோன்புக் காலத்தில் அவர்களின் உணவில் இடம்பிடிக்கும் தித்திக்கும் பதார்த்தம் இதுவாகும்.

ஏற்கனவே, செந்தூரம் ' ஆஹா சமைக்கலாமே ' பகுதியில் வட்டிலப்பம் எப்படித் தயாரிப்பதென்பதைச் சொல்லியிருக்கிறேன் . இதுவும் சின்ன சின்ன மாற்றங்களுடன் சுவையான வட்டிலாப்பம் தயாரிக்கும் முறையே!

தேவையானவை:

முட்டைகள் - 5

பிரவுன் சீனி- 200 g (கித்துல் கருப்பட்டி இங்கு எனக்குக் கிடைக்காது என்பதால் இதைப் பயன்படுத்துவேன்)

கட்டித் தேங்காய்ப்பால்(நீர் விடாது பிழிந்தெடுக்கும் முதல் பால் ) 200 ml -250ml ( நான் டின்னில் வரும் கட்டிப்பால் அல்லது தேங்காய் பவுடரை 200ml இளம்சூட்டுத் தண்ணீரில் கலந்து ஆறவிட்டு எடுப்பேன்.)

வனிலா சுகர் 2 தேக்கரண்டி + அரைத் தேக்கரண்டி ஏலப் பொடி (முட்டை வாசத்தைப் போக்க.)

கஜு - 50g -75g (சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.)

இரண்டு மேசைக்கரண்டி டின் பால்.(இதைச் சேர்ப்பதால் மேலே சொன்ன சீனியில் சிறிதளவு வேணுமென்றால் குறைக்கலாம்)


செய்முறை:

-முட்டைகளை ஒன்று ஒன்றாக உடைத்து ஒரு பாத்திரத்தினுள் விட்டுக் கொள்ளுங்கள். ( எப்போதுமே முட்டை பாவிக்கையில் ஒன்று ஒன்றாகத் தனியாக சிறு பாத்திரத்தில் உடைத்தெடுத்து பின்னர் பெரிய பாத்திரத்தில் சேர்ப்பது நன்று. முட்டை ஒன்று பழுதாகி இருப்பின் அதை மட்டுமே நீக்கிவிடலாம் )

- இதனை இரண்டு நிமிடங்கள் நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ளுங்கள்.

49209796_510775252743115_8500175659618795520_n.jpg

Hand Mixer அல்லது Wishk பாவிக்கலாம் .



-இதனுள் சீனி (கருப்பட்டி )சேர்த்து மேலும் இரு நிமிடங்கள் அடித்துக் கொள்ளுங்கள் .

49530562_806545363023785_7641483453719904256_n.jpg


- தேங்காய்ப் பாலை சிறிது சிறிதாகச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வரை அடித்துக் கொள்ளுங்கள். அதோடு டின் பாலையும் சேர்த்து அடியுங்கள். சீனி கரைந்திருக்கவேணும்.


49178173_734933973545055_7993876741443551232_n.jpg



இதனுள் வனிலா சுகர், ஏலப்பொடி கலந்து நன்றாகக் கலக்கி கீரிஸ் பண்ணிய ஒரு சில்வர் பாத்திரத்துள் இக்கலவையை விட்டுக் கொள்ளுங்கள்.

மேல்பகுதியைக் கவர் பண்ண மறக்க வேண்டாம். ஆவியில் வேகும் பொழுது நீர் உள்ளே செல்லாத வகையில் மூடிக் கொள்ளுங்கள்.

49708672_309814729666626_9069964236062457856_n.jpg

இதனை நீராவியில் அவித்து எடுக்க வேண்டும். நீர் கொ்தித்த பின்னர் 10- 15 நிமிடங்கள் அவியவிட்டு வெளியே எடுத்து,கஜூ தூவுங்கள்.

49771498_513126482531005_2483177750689480704_n.jpg

மீண்டும் கெட்டியாகும் வரை, அதாவது மேலும் 25- 35 நிமிடங்கள் அவித்தெடுங்கள். நடுவில் Food pick னால் குத்திக் பார்த்தால் கறைபடாது வருவதே பதம்.


வெளியே எடுத்து ஓரத்தை கத்தியால் லேசாக விடுவித்துவிட்டு மேலே ஒரு வட்டத் தட்டினால் மூடிக்கவிழ்த்தால் அப்படியே அந்தத் தட்டில் வட்டிலப்பம் வந்துவிடும் .விரும்பினால் மேலே கஜூ அலங்காரம் சேந்து கொள்ளலாம்.

49397666_351762738938571_6773835893116502016_n.jpg

அவிக்க முதல் சீனியில் ஒரு மேசைக்கரண்டியும் ஒரு தேக்கரண்டி நீரும் சேர்த்து பாகு காய்ச்சி அதைத் தட்டில் விட்டு விட்டு மேலாக வட்டிலப்பக் கலவையை விட்டு அவித்தெடுத்தால் கார்ல் சோஸ் சேர்த்த வட்டிலப்பம் தனிச் சுவை் தரும்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
Seimuraiya psrthale sappida assi thonuthu. Seithu sappittutu than comments
செய்திட்டு வாங்கோ எமிலி . உங்களுக்குத் தெரிந்த செய்முறைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் . நாங்களும் செய்து பார்ப்போம் .
 
Top Bottom