• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிலவே நீயென் சொந்தமடி - அறிமுகம்

நிதனிபிரபு

Administrator
Staff member
அன்பிற்கினிய வாசகர்களுக்கு,

இரு வேறு குடும்பச்சூழலில் வாழும் இருவருக்குள் காதல் முகிழ்க்கிறது. காதலுக்குக் கண்ணில்லைதான். காதலருக்குக் கண்ணோடு சேர்த்துச் சிந்தனை செய்யும் திறனும் உண்டுதானே? ஆக, தம் காதல் கைகூடுவதற்காகச் சிந்தித்துச் செயலாற்றும் காதலர்களின் காதல்தான் இக்கதை.

இந்த நாவலில் நாயகி கவின்நிலா கற்ற கல்லூரியில் செந்தூரன் ஒரு சிறு உரையாற்றுவான். அந்த உரையில் அவன் சொல்லும் விசயத்தை மிக ஆழமாக நானும் நம்புகிறேன்.

கல்வி கண்ணைப் போன்றது. எப்படியாவது கற்றுவிடுங்கள். ஆனால், வரவேயில்லை என்கிறவர்களுக்கு? கடுமையான உழைப்பும் தொடர்ச்சியான முயற்சியும் விடாத தன்னம்பிக்கையும் உயர்வைத் தவிர்த்து வேறு தரவே தராது!

நட்புடன் நிதனிபிரபு
 

Goms

Well-known member
கவின்நிலா, செந்தூரனைக் காணக் காத்திருக்கிறோம்.....
 
Top Bottom