• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

எலியும் நானும்

நிதனிபிரபு

Administrator
Staff member
எலியும் நானும் :

மூன்று கிழமைகளுக்குப் பிறகு சிந்து இன்றைக்கு வீட்டுக்கு வாறா. திரும்ப ஞாயிறு போயிருவா. அதால பிள்ளைக்குச் சாப்பாடுகள் செய்து குடுக்கோணும் எண்டு நேற்று இரவு 11. 30க்குப் பிறகுதான் ரோல்ஸ்க்கு கறி வச்சனான்.

சமையல் முடிய பன்னிரெண்டரை ஆச்சு.

வீடு முழுக்க மணக்குதே எண்டு வாசல் கதவைக் கொஞ்சம் திறப்பம் எண்டு நினைச்சு முழுசா திறக்கக் கூட இல்ல. பெரிய சைஸ் எலி ஒண்டு வீட்டுக்க புகுந்து, போறதுக்கு வழி இல்லாம கீழ் மாடிக்க விழுந்திட்டார்.

நல்ல காலம் இப்ப குளிர் நேரம் எண்டபடியா கீழ எல்லா ரூம் கதவுகளும் பூட்டி இருந்தது. சோ, படி இறங்கினதும் வாற அந்தச் சின்ன முன் துண்டுக்க ஆள் மாட்டிட்டார்.

இவரை எழுப்பினா பேச்சு விழும்.

முதல் குற்றம்: இந்த நேரம் உங்களை ஆர் சமைக்கச் சொன்னது?

ரெண்டாவது குற்றம்: சமைச்சது போதாம நடுச் சாமத்தில உங்களை ஆர் வீட்டு வாசல் கதவைத் திறக்கச் சொன்னது, யன்னல் மட்டும் திறந்தா போதாதா?

சோ, சட்ட விரோதமா வீட்டுக்க நுழைஞ்சவரைப் பிடிக்கவேண்டிய கட்டாயம், குற்றம் செய்த எனக்கு மட்டுமே. நைசா போய்த் தம்பிய எழுப்பிக்கொண்டு வந்தா, அவர் எனக்கும் மேல. மேல் படிலயே இருந்திட்டார்.

கடைசியா நான் மட்டுமே பிடிக்கிற சூழ்நிலை. எனக்கும் பயம்தான். பாம்பைக் கூட அடிச்சிடலாம் போல. இந்தக் கன்றாவி ஓடுறதப் பாத்தாலே பயத்த விட அருவருப்புத்தான் அதிகம்.
ஆனாலும் கீழ இருந்த டஸ்ட் பின்ன எடுத்து எலிக்கு மேல கவுப்பம் எண்டா எங்க? இந்தா வந்து கவிழு எண்டு எலி பாத்துக்கொண்டு நிக்கும் பாருங்க.

சின்ன இடமா போச்சு. இல்லையோ நேற்று நானும் எலியும் ஓடிப்பிடிச்சு விளையாடி இருப்பம்.
நேரம் ஒண்டரையையும் தாண்டிட்டுது. எலியும் களைக்கிற மாதிரி இல்ல. நானும் அதைப் பிடிக்கிற மாதிரி இல்ல.

இது ஒண்டும் நடக்காது. போற போக்கில இவா எலிக்குப் பக்கத்தில பாய விரிச்சுப் படுத்தாலும் படுப்பாவே தவிர எலியப் பிடிக்கப் போறேல்ல எண்டு தம்பிக்கு விளங்கிட்டுது போல.
என்னட்டச் சொல்லாம போய்த் தகப்பனை எழுப்பி விட்டுட்டார். அந்த வடிவேலு சிரிப்பார் தெரியுமா, ஹிஹிஹி எண்டு. அந்த நிலைமை எனக்கு இவரைப் பாத்ததும்.

பெரிய எலியப் பிறகு கவனிப்பம் எண்டு நினைச்சிட்டார் போல. ஒன்றுமே சொல்லாம சின்ன எலியப் பிடிக்க உதவினவர். இப்ப தம்பி மேல இருந்து எலி எங்க நிக்கிறார் எண்டு சொல்ல, நானும் இவருமா சேர்ந்து பிடிக்க முயற்சி எடுத்து, கடைசியா நான்தான் டஸ்ட் பின்னால எலிய மூடிட்டன்.

அப்பாடி எண்டு அஞ்சு நிமிசம் அதுக்குப் பிறகுதான் நிம்மதியா இருந்தம். நான் இவரைப் பாக்கவே இல்ல. அந்த வீட்டுச் சுவரை, படிய எல்லாம் எப்பிடிக் கட்டி இருப்பாங்கள், சல்லியையும் மண்ணையும் எந்த அளவில கலந்திருப்பாங்கள் எண்டு நான் மும்முறமா ஆராய்ச்சில இறங்கிட்டன்.

என்னையே பாத்த மனுசனுக்குச் சிரிப்பு வந்திட்டுது போல, சிரிச்சிட்டார். அப்பாடி ஒரு மாதிரி பெரிய எலி ஆபத்தில இருந்து தப்பிட்டுது.

இப்ப டஸ்ட் பின்னுக்க மாட்டி இருக்கிற சின்ன எலிய எப்பிடி வெளில கொண்டு போறது? நானும் இருக்கிற அத்தனை ஸ்ப்ரே எல்லாம் அடிச்சு, அத மயங்க வைப்பம் எண்டு பாத்தா, அது அதுக்குப் பிறகுதான் அந்த வாளிக்கையே இன்னும் வேகமா சுத்தி சுத்தி ஓடுது.

பிறகு இவர்தான் காட்போட் மட்டையைக் கொண்டுவந்து வாளிக்குக் கீழால தள்ளி, வாளியை மூடி அப்பிடியே தூக்கிட்டார்.

சத்தியமா எனக்குக் கொலை செய்ற அளவு கோவம். ஆனா ஏனோ பாக்கப் பாவமா போச்சு. பிறகு இவர் கொண்டுபோய் வெளில விட்டுட்டு வந்திட்டார்.

பிறகு கீழ எல்லாம் மொப் பண்ணி, வேலை எல்லாம் முடிச்சுப் பாத்தா மூண்டு மணி. கொடுமை. தெரியாம வாசல் கதவைத் திறந்த பாவத்துக்கு இத்தனைய அனுபவிச்சிட்டு நிக்கிறன்.


1764338550520.png
 

Goms

Well-known member
ஹா... ஹா...ஹா... 🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த சின்ன அனுபவத்தை கூட அழகா, நகைச்சுவையோட சிரிக்க, சிரிக்க சொல்லி இருக்கீங்க. 🤣🤣🤣🤣🤣

ஒரு வேளை உங்க மகளை வரவேற்க வந்திருக்குமோ? 😜

உங்க சமையலை நல்லா மோப்பம் பிடிச்சிருப்பார் எலியார். திரும்ப வந்தாலும் வருவார். என்ஜாய் பண்ணக் காத்திருங்க.😜😂
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Today's Birthday

Top Bottom