• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
காந்த இரவில் விழி மூடியும் உறங்காத
விந்தைப்பொழுதுகளில் மட்டும்
சிந்தையைத் துளைக்கின்றது
உன் ஞாபகங்கள்!

நீயும் நானுமான
தனிமைத்தருணங்கள்
அத்தனையும் கற்பனைகள்!
சேமிக்கப்படுகின்றன
நினைவுகள் என்னும் குங்குமச்சிமிழ்களில்!

காலங்கள் நீள்கின்றது
வளர்ந்து கொண்டே போகின்றன சிமிழ்கள்
அதைத் தானும் திறக்காமல்
என்னையும் திறக்க விடாமல்
ஒரு நாயாய் காவலிருக்கின்றது என் விதி!

இதோ!
தாக்கமும் ஓரிடத்தில்
மறுதாக்கமும் அதேயிடத்தில்
நியூட்டனின் விதியை
உடைக்கிறது என் காதல்!

என் கண்களில் நிகழ்வதோ
நீரின் நிலைமாற்றம்!
ஆம் பொங்கி வரும் கண்ணீர்
பிறர் கண்பட முன்
ஆவியாகித்தானே ஆக வேண்டும்!

என் காதலனே!
ஒரு கை கொண்டு ஓசை வருமா?
ஓசையோடு அடியுண்ட வலியையும்
என் கை வாங்கி நிற்கிறதே!
இது எப்படி சாத்தியம்?

ஒளித்துக்கொண்ட உன் கையை வெளியிலெடு!
இறந்த காலத்தையாவது ஒத்துக்கொள்!
நான் கட்டிய கோட்டை
காற்றில் அல்ல என்று
அமைதி கொள்கிறேன்!



- உஷாந்தி கௌதமன்
 
Top Bottom