‘உடலே எந்தன் முதலீடு’ – அகத்தியா

சாலையோரம் நிற்கின்றேன்...
என்னுடலை நானே விற்கின்றேன்...
வறுமையும் என்னை வாட்டியது _ பின்
இளமை இவ்வழி காட்டியது!
கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்!
என் கட்டுடல்
அதனை மீட்டுத்தரும்!
உடலே எந்தன் முதலீடு - இதில்
கட்டணம் கட்டி விளையாடு!
கற்பை காப்பது பெரும் பாடு...
உடலை விற்றேன் வெறுப்போடு!
காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப்போனதடா!
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி மாறிப்போனதடா!
கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா!
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினி இல்லையடா!
நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய் போனதடா!
பாடாய் படுத்தும் பாவிகளால்
உடல் ரணமாய் ஆனதடா!
மங்கையின் மீது போர்தொடுத்தால்
கட்டுடல் தாங்காது!
பலர் வேகத்தால் வரும் சோகத்தால்
என் இரவுகள் தூங்காது!
என் தன்மானம்,
இங்கு அவமானம்!
என் நிர்வாணம்,
தரும் வருமானம்!


