• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 53

Ananthi.C

Well-known member
அழாம.... தொண்டை அடைக்காம....படிக்கவே முடியல.... ஒவ்வொரு பதிவும் மனதை அத்தனை ஆழமாக தாக்கியது....
மித்ரா... எவ்வளவு அற்புதமான தேவதை..... தன்னைத்தானே செதுக்கி கொண்ட கல்கி....
கீதன்... மித்ராவின் மீதான காதலும்...சத்தி வித்தியிடம் கொண்ட அன்பும் என அந்த மூவருக்கும் கிடைத்த வரம் அவன்....
சத்தி...அக்கா மாமா காட்டிய அன்பை.. பாசத்தை பன்மடங்காக திருப்பி காட்டும் பாசக்காரன்....
பவி..அவள் அம்மா அக்காவை போல் சுயநலமாக இல்லாமல்.... அனைவரின் மகிழ்ச்சியையும் பெரிதென நினைத்த அவளும் ஒரு தேலதையே...

மனதின் ஆழத்தில் விழுகின்ற அன்பின் விதை விருட்சமாகி தன் அன்பிற்க்குரியவர்களை குறை நிறையோடு ஏற்று வாழவைக்கும் அன்றி...அழிவை தராது என்பதற்கு கீதன் மித்து காதலே சாட்சி...

😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
அழுது அழுது வாசித்தாலும் கடைசியாக ஆனந்தக் கண்ணீராக வரவைத்த உங்கள் திறமைக்கு நிகரேது?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற மாதிரி
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் என்று நிரூபித்து விட்டீர்கள்.
மிகவும் மனதை நெகிழ வைத்த உருக்கமான கதை. மிக்க நன்றி.

உங்கள் எழுத்து பணி மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்.
 
Top Bottom